கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
பீகார் மாநிலத்தில் கோயிலை காலி செய்யுமாறு அனுமனுக்கு ராமர் நேரடியாக நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் வாசியபுரம் பகுதியில் புகழ்பெற்ற ஒரு பழமையான அனுமன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தில் சாலை ஓரத்தில் உள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அந்த கோயிலுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீஸ் நேரடியாக அனுமனுக்கு அனுப்பப்பட்டது. அதில் முக்கியமாக கவனிக்கதக்க ஒன்று அந்த நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி அதிகாரியின் பெயர் ராமன். எதிர்பாராத விதமான இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.