1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (21:35 IST)

குஜராத்தில் மாணவர் ஒருவரின் உதவியுடன் ஏசி சோபாவை கண்டுபிடித்து மெக்கானிக் சாதனை!

ஏசி சோபாவை கண்டுபிடித்து குஜராத்தை சேர்ந்த மெக்கானிக் சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரைச் சேர்ந்த தஸ்ரத் படேல் என்ற ஏசி மெக்கானிக், தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன்  ஏசி சோபா ஒன்றை வடிவமைத்துள்ளார்.
 

 
இது குறித்து படேல் கூறியதாவது, தனக்கு இந்தகைய ஏசி சோபாவை உருவாக்கும் எண்ணம் தனக்கு கடந்த  2008 ஆம் ஆண்டு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அதற்கான வேலைகளை மேற்கொண்டதாகவும் கூறினார். இதன் முதற்படியாக அவர் 175 கிலோ எடை மிக்க சோபாவினை கண்டுபிடித்ததாக கூறினார். இதன் எடை மிகவும் அதிகமானதால், குறைந்த எடையில் ஷோபாவை உருவாக்க வேண்டிய முயற்சியில் ஈடுபட்டதாகவும் படேல் தெரிவித்தார்.
 
பின்னர் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் முன்னாள் மாணவரும், வடிவமைப்பாளருமான அங்கித் வியாஸ் உதவியுடன் 35 கிலோ எடை கொண்ட ஏசி சோபாவை உருவாக்கியுள்ளதாக படேல் தெரிவித்தார். இதன் விலை ஒரு லட்சம் முதல் 1.25 லட்சம் ரூபாயாக இருக்கும் எனவும் படேல் தெரிவித்துள்ளார்.