1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:44 IST)

143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு? – மறுப்பு தெரிவித்த ஜிஎஸ்டி கவுன்சில்!

GST
சாக்லெட், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்தபட உள்ளதாக வெளியான தகவலுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கும் பல்வேறு சேவைகளுக்கும் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. பொருட்களின் தன்மையை பொறுத்து 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சாக்லேட், மின்சார உபகரணங்கள், உடைகள் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்துவது குறித்து மாநில அரசுகளோடு பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவலை ஜிஎஸ்டி கவுன்சில் மறுத்துள்ளது. அவ்வாறான வரி உயர்த்துதல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், வரியை உயர்த்தும் எண்ணமும் இல்லை என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.