ஆசிரியருடன் காதல்: அந்தரங்க படத்தை அனுப்பிய மாணவி தற்கொலை
மும்பையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தன்னுடைய கணினி ஆசிரியருக்கு தன்னுடைய ஆபாச படத்தை அனுப்பியுள்ளார். பின்னர் பயத்தில் அந்த மாணவி தற்கொலை செய்துள்ளார்.
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆசிரியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவி ஒரு கணிணி கற்றுத்தரும் மையத்திற்கு படிக்க சென்றுள்ளார். அங்கு கணினி கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையே ஒருவகையான நெருக்கம் ஏற்பட்டது.
இந்த நெருக்கத்தினால் தன்னுடைய ஆசிரியருக்கு அந்த மாணவி தன்னை ஆபாசமாக செல்பி எடுத்து அனுப்பியுள்ளார். மேலும் பல நாட்கள் இருவரும் போன் மூலம் உரையாடியும் உள்ளனர். ஆசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த மாணவி தனது ஆபாச செல்பி படத்தை அவரின் போனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
தன்னுடைய ஆபாச படத்தை அனுப்பிய பின்னர் அந்த மாணவி பயந்துவிட்டார். எனவே அதனை உடனே அழிக்க அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதனை அழிக்காமல் தன்னுடைய நண்பர்கள் சிலருக்கு அனுப்பியுள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட அந்த மாணவி தனது ஆபாச படத்தை பலருக்கு பரப்பியதால் பயந்து தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது மகளை அந்த ஆசிரியர் தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.