1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (16:35 IST)

சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியது பெண்ணின் காதலர் - வழக்கில் திருப்பம்

கேரளாவில் பாலியல் தொல்லை கொடுத்த ஒரு சாமியாரின் ஆணுறுப்பை, ஒரு பெண் வெட்டி வீசிய சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
கேரள மாநிலத்தில் கொல்லத்தை சேர்ந்த கங்கேசானந்தா என்ற சாமியார் அதே பகுதியில் வசிக்கும் தாய் மற்றும் மகளை பல வருடங்களாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரின் கொடுமை தாங்க முடியாமல், அந்த இளம்பெண் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி வீசினார். 
 
இதையடுத்து அந்த சாமியார் மருத்துவமமையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக அந்த சாமியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண் என் உறுப்பை வெட்ட வில்லை. நானே அறுத்துக் கொண்டேன் என சாமியார் கூறினார். 
 
இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் தாயாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரின் மகளுக்கு வேறு ஒரு வாலிபருடன் காதல் இருந்ததாகவும், சாமியாரின் தொல்லை தாங்க முடியாததால், கோபமடைந்த அப்பெண்ணின் காதலர், சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
இதில் எது உண்மை என போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து அவர்கள் மூவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.