1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheeesh
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2016 (18:54 IST)

​இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு சாகுபடிக்கு அனுமதி

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு சாகுபடிக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.


டெல்லி பல்கலைக்கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை உற்பத்தி செய்துள்ளது. இந்த கடுகை வர்த்தக ரீதியாக சாகுபடி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு அனுமதி அளித்துள்ளது.  

நாட்டின் சமையல் எண்ணெய் தேவை உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருப்பதால், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மரபணு மாற்ற தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதித்தால், பருத்தி விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே தங்களுக்கும் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.