1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 4 மார்ச் 2017 (05:57 IST)

உ.பி அமைச்சர் திடீர் தலைமறைவு. வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமா?

பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி தேடப்பட்டு வரும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் காயத்ரி பிரஜாபதி என்பவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.




உ.பி அமைச்சர் காயத்ரி பிரஜாபதி ஒரு குழுவுடன் இணைந்து தாய் மற்றும் மகளை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்று வருவதால் ஆளுங்கட்சி அவருக்கு உதவ முடியாத நிலையில் உள்ளது. எனவே அமைச்சருக்கு எதிரான சூழ்நிலை இருப்பதல் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர் பிரஜாபதி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  தவிர்த்து வருகிறார். எங்கே இருக்கிறார் என்ற விவரமும் கிடைக்கவில்லை.  இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. விமான சேவை நிறுவனங்களுக்கு அவரது புகைப்படம் அனுப்பப்பட்டு அவரை பிடிக்க உதவுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.