இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்


Murugan| Last Modified வியாழன், 28 ஏப்ரல் 2016 (16:40 IST)
இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை 18 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
அரியானா மாநிலம் கதர்பூரைச் சேர்ந்த குஜ்ஜார் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூன்று வாலிபர்கள் அவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். 
 
அதன்பின் மயக்க மருந்து தடவிய துணியை அவரின் முகத்தில் காட்டி அவரை மயக்கமடைய செய்துள்ளனர். பின்னர், அவரை ஊருக்கு ஒதுக்குப்புறம் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதோடு, தன்னுடைய நண்பர்களையும் அழைத்து, அந்த பெண்ணை அவர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர். இப்படி மொத்தம் 18 பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
 
அந்த காரியத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்த, அதே ஊரை சேர்ந்தவர்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 
 
ஆனால் இதுசம்பந்தமாக ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :