வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2016 (08:12 IST)

புதிய ரூபாய் நோட்டுகள் இன்று முதல் விநியோகம்!

புதிய ரூபாய் நோட்டுகள் இன்று முதல் விநியோகம்!

இந்தியா முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 100 ரூபாய் நோட்டுக்கு பெரும் தட்டுப்பாடு வருகின்றன.


 
 
மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் வைத்திருப்பவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவும் பெரும் அவதிப்படுகின்றனர்.
 
மேலும் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்த புதிய நோட்டுகளை மக்களுக்கு விநியோகிப்பதற்கு வசதியாக நேற்று அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
 
இதனையடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வங்கிகளில் மாற்றம் செய்ய புதிய எளிய படிவம் ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
 
மேலும் மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வங்கி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் நாளை முதல் புதிய ரூபாய் நோட்டுகளை பெறலாம்.