1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 10 ஜூன் 2017 (21:49 IST)

மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு

வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என பெங்களூர் மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


 

 
பெங்களூரைச் சேர்ந்த சுதா கட்வா என்பவர் மால் ஒன்றில் உள்ள உணவகத்தில் இலவசமாக குடிநீர் வழங்கப்படாததை எதிர்த்து பெங்களூரு மாவட்ட நகர நுகர்வோர் குறைதீர் மையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூர் மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.