செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 9 மே 2017 (21:26 IST)

தீப்பிடித்து எரியும் ஏரி (வீடியோ)

கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள ஏரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. 


 

 
கர்நாடகா மாநிலம், ஹாசன் அருகே பசவனஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஏரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
 
இந்த ஏரி தீப்பிடித்து எரிய காரணம், அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவது என தெரியவந்துள்ளது. மேலும் பெட்ரோல் டாங்கர் லாரிகள் இந்த ஏரியில்தான் சுத்தப்படுத்தி வரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டீசல் நீரின் மேற்பரப்பில் படலாமக மிதந்துள்ளது. இதன் காரணமாக ஏரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

 

நன்றி: ANI