1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (17:36 IST)

ஜனவரி முதல் அனைத்து வாகனங்களுக்கும் Fastag கட்டாயம் ! மத்திய அரசு

இந்தியாவில் வரும் புத்தாண்டு ஜனவரி 1 முதல் அனைத்து 4 சக்கர  வாகனங்களுடம் பாஸ்டேக் வைக்க வேண்டுமென மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு ஒவ்வொரு வாகனமும் நின்று செல்லும்போது  கடும் நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், இதைக் குறைக்க வேண்டிமத்திய அரசு, பாஸ்டேக்ஸ் எனும் பிரிபெய்ட் மின்னணு கட்டணை அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து நேற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, அதில்,  கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1 க்கு முபாக விற்பனை செய்யப்பட்ட சரக்கு, 4 சக்கரம் கொண்ட பயணிகள் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் எனவும், வாகனங்களில் தகுதியை நிரூபிக்க பிட்னஸ் சர்டிபிகேட் சான்று புதுப்பிக்கவேண்டுமெம தெரிவித்துள்ளனர். மேலும் புதிய 3 வது நபர் இன்ஸ்சூரன்ஸ் பெற ஏப்ரல் 1 முதல் பாஸ் டேக் பெறுவது காட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.