வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2024 (08:55 IST)

முகத்தை பொலிவாக்காத Fairness Cream! அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

Beauty Tips

அழகு சாதனப் பொருட்களில் ஒன்றான Fairness Cream பொலிவை தரவில்லை என கூறி ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

 

 

உலகம் முழுவதும் அழகு சாதனப்பொருட்களுக்கான வரவேற்பும், விற்பனையும் அதிகமாக உள்ள நிலையில் பல நிறுவனங்கள் அழகு சாதன தயாரிப்பை மேற்கொண்டு வருகின்றன. கருப்பாய் இருப்பவர்களையும் சில வாரங்களில் பொலிவாய் மாற்றிவிடும் என Fairness Creamகள் தொடர்ந்து விளம்பரம் செய்யப்படுகின்றன.

 

அவ்வாறாக விளம்பரம் செய்யப்பட்ட இமாமி நிறுவனத்தின் முக அழகு க்ரீமை ஒருவர் கடந்த 2013ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தியும் அந்த முகப்பொலிவை தராததால் அந்த வாடிக்கையாளர் இதுகுறித்து டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளரை ஏமாற்றும் விதத்தில் விளம்பரம் செய்திருப்பதாக கருத்து தெரிவித்ததோடு, ரூ.15 லட்சத்தை அபராதமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விதித்துள்ளது.

 

Edit by Prasanth.K