ஆன்லைனில் பள்ளிக்கட்டணங்கள் செலுத்துவதில் கொள்ளை - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் போது, வரி என்ற பெயரில் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து வருகிறது. எனவே, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன் லைன் மூலம் பணம் செலுத்துதல் ஆகியவற்றை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளிக்கூட கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. எனவே, அனைவரும் அப்படியே பணம் செலுத்தி வருகின்றனர்.
இதில் ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போதும், பணப் பரிவர்த்தனை கட்டணம் மற்றும் அதற்கான வரி உட்பட ரூ.20 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. ஒரு சிலர் ரூ.21 கூடுதலாக செலுத்துகிறார்கள். அப்படி கூடுதலாக செலுத்தும் பணம், பள்ளிக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீதில் வருவதில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவருக்கு ரூ.20 எனில், நாடு முழுவதும் உள்ள பெற்றோர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணம் கூடுதலாக பெறப்படுவது தெரிய வந்துள்ளதால், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு பின்னால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.