செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 21 ஏப்ரல் 2025 (13:37 IST)

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!
பெங்களூரில் அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கொலைகாரண காரணம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரு விவேக் நகர்  பகுதியைச் சேர்ந்த முன்னாள் முன்னாள் ராணுவ வீரர் போலு அரப் என்பவர் மூன்று மாடி வீட்டில் இரண்டு மாடுகளை வாடகைக்கு விட்டு விட்டு ஒரு மாடியில் வசித்து வந்தார். இவர் அது மனைவி தபஸ் மற்றும் மகன் சமீர் ஆகியவர்களும் அதே வீட்டில் வசித்து வந்தனர்.
 
இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர் என்பதால் கடுமையான விதிகளை விதித்ததாகவும் அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசக்கூடாது என்றும் மகனை சரியான நேரத்தில் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்ததாக தெரிகிறது.
 
இதனால் ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த அம்மா மற்றும் மகன் ஆகிய இருவரும் சேர்ந்து அப்பாவை கொல்ல முடிவு செய்தனர். முதலில் பாலில் தூக்க மருந்து கொடுத்து அவர் தூங்கியவுடன் தலையணையை முகத்தில் அமைத்து கொலை செய்தனர். அதன் பிறகு திருடர்கள் வந்து திருடிவிட்டு கொலை செய்துவிட்டதாக  நாடகமாடிய நிலையில் போலீசார் வந்து விசாரணை செய்தபோதுதான் அம்மா மகன் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva