வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (11:23 IST)

லாலு பிரசாத் யாதவ்விடம் அமலாக்கத்துறை விசாரணை.. அமெரிக்க டாலர்கள் கைப்பற்றியதாகத் தகவல்..

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்விடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை முடித்துள்ளதாகவும்  9 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த விசாரணைக்கு பின்னர் அவரிடம் இருந்து தங்கக் கட்டிகள் தங்க நகைகள் மற்றும் அமெரிக்க டாலர்கள் உள்பட ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
லாலு பிரசாத் யாதவ்விடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை 9 மணி நேரத்திற்குப் பின் சற்றுமுன் நிறைவு அடைந்துள்ளது.
 
அவர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதற்காகக் கூறி வேலை பெற்றவர்களிடம் இருந்து நிலங்களை லஞ்சமாகப் பெற்று, குறைந்த விலைக்கு அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு மாற்றி எழுதித் தந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது
 
இந்த சோதனையில், ரூ.70 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்கக் கட்டிகள், 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது!
 
Edited by Mahendran