வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 9 நவம்பர் 2016 (08:40 IST)

ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் சாதாரண மக்கள் மீது பொருளாதார யுத்தம்!

ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் சாதாரண மக்கள் மீது பொருளாதார யுத்தம்!

இன்று முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணி அளவில் அறிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கருப்பு பணத்தை மீட்கவும், கள்ள பணத்தை தடுக்கவும் மோடி அரசு எடுத்திருக்கும் துணிச்சலான நடவடிக்கை என பலரும் பாராட்டினாலும் பொது மக்கள் மத்தியில் இது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்றாட செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என தெரியாமல் இருக்கிறார்கள்.
 
நேற்று இரவு முதலே சமூக வலைதளங்களில் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை அடித்தட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
 
அவர்கள் கூறும் காரணம் தங்களின் அன்றாட வாழ்க்கை இதனால் குழம்புகிறது. கருப்பு பணம் வைத்திருப்பது ஒரு சிலரே ஆனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள். கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் ஒரு சிலர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அரசு சாதாரண மக்கள் மீது பொருளாதார யுத்தத்தை நடத்துவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்து வருகிறது.