திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 மே 2025 (08:44 IST)

6 மாதங்களில் கன்னடம் கத்துக்கலைனா பணி நீக்கம்! வங்கி மேனேஜர் விவகாரத்தில் அதிரடி!

Bank Manager Hindi issue

கர்நாடகாவில் வங்கி மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்த விவகாரத்தில் பரபரப்பான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சூர்யா நகரில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க்கின் மேனஜராக இந்தி பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் அவரிடம் வாடிக்கையாளர் ஒருவர் பேச வந்தபோது அவர் கன்னடத்தில் பேசாமல் இந்தியில் பேசினார். கன்னடத்தில் பேச முடியாது என அவர் பிடிவாதமாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வங்கி மேலாளரின் இந்த செயலுக்கு கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதல்வர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்ததுடன், வங்கி பணிகளில் வருபவர்கள் அந்தந்த மாநில மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

 

இந்த பிரச்சினை பூதாகரமான நிலையில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். ஆனாலும் ஒழுங்கு நடவடிக்கையாக அவர் வேறு வங்கி கிளைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் 6 மாதங்களில் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கன்னட அபிவிருத்தி ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K