கோலிலுக்குள் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்
ஒடிசா மாநிலத்தில் ஊனமுற்ற சிறுமியை கோயிலுக்குள் வைத்து பலாத்காரம் செய்தவனை மக்கள் அடி, துவைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
ஒடிசா மாநிலத்தில் பரிபடா பகுதியில் ஜகன்னாத் என்ற கோயில் உள்ளது. ஊனமுற்ற 11 வயது சிறுமி அந்த கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது கோயில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்துள்ளது. இதை அறிந்துக்கொண்டு கோயிலுக்குள் சென்ற அந்த கொடூரன் சிறுமியை பலாத்காரம் செய்தான்.
இதில் மயக்கமடைந்து தரையில் கிடந்த சிறுமியை பார்த்த மக்கள், சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த கொடூரனை தேடி கண்டுபிடித்து அடி துவைத்தனர். பின் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.