சாலையில் சிதறிக்கிடந்த வைர கற்கள்? கூட்டம் கூட்டமாய் அள்ளிய மக்கள்! – குஜராத்தில் விநோத சம்பவம்!
குஜராத்தின் சூரத் பகுதியில் வைரக்கற்கள் சிதறிக்கிடப்பதாக தகவல் பரவிய நிலையில் மக்கள் ஓடி சென்று அள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரத் அருகே உள்ள வரச்சா பகுதியில் வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான மதிப்புடைய வைரக்கற்கள் சாலையில் விழுந்து சிதறி கிடப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. காட்டுத்தீ போல பரவிய இந்த செய்தியாள் வரச்சா சாலையில் குவிந்த மக்கள் இன்ச் பை இன்ச் சாலையை சல்லடை போட்டு சலிக்கத் தொடங்கினர்.
அப்போது சிலருக்கு வைரம் போல மினுமினுக்கும் கற்கள் கிடைத்ததால் சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பியது. ஆசையோடு அந்த கற்களை அவர்கள் கொண்டு சென்று சோதித்தபோது அது உண்மையான வைர கற்கள் அல்ல என்றும், சேலை மற்றும் கவரிங் நகைகளில் பதிக்கும் விலைக்குறைந்த செயற்கை மினுமினுப்பு கற்கள் என தெரிய வந்துள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Edit by Prasanth.K