தோனி, ரெய்னாவுக்கு விபச்சார புரோக்கருடன் தொடர்பு?: வைரலாக பரவும் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கும், நட்சத்திர வீரர் ரெய்னாவுக்கும் விபச்சார புரோக்கர் பிரீதிந்திரநாத் சன்யாலுடன் தொடர்பு உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
டெல்லி சப்தர்ஜங் பகுதியில் உள்ள 62 வயதான பிரீந்திரநாத் சன்யாலுக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது அவரது என்கிளேவ் வீட்டில் 23 வயதான பெண் ஒருவர் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அந்த பெண் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிரீந்திரநாத் சன்யால், மத்திய ஆசிய நாடுகளில் இருந்து பெண்களை இந்தியாவுக்கு கடத்தி வந்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இவருக்கும் 2 கிரிக்கெட் வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பிரீந்திரநாத் சன்யாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனியும், ரெய்னாவும் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அந்த கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் என கூறப்படுகிறது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் பிறந்த நாளை அஜய் அகலவாட்டின் குர்கான் பண்ணை வீட்டில் கொண்டாடியபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் என்ன தொடர்பு என்பதை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.