1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2015 (06:59 IST)

இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் - முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்

தூக்கு தண்டனையை இந்தியாவில் ஒழிக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.
 

 
தூக்கு தண்டனைணை ஒழிப்பது குறித்த ஒரு நாள் ஆலோசனைக் கூட்டத்திற்கு சட்ட ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
 
இந்நிலையில், இது குறித்து சட்ட ஆணையத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஒரு பரிந்துரை அளித்துள்ளர். அந்தப் பரிந்துரையில், நாட்டில், சமூக, பொருளாதார அடிப்படையில், கொடிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தூக்கு தண்டனை முறையை ஒழிக்க வேண்டும்.
 
அது போன்ற தண்டனையை உறுதி செய்யும் போது, மிகுந்த வலியை நான் உணர்ந்தேன். நான் குடியரசுத் தலைவராக பதவி வகித்த போது, தூக்கு தண்டனை குறித்து முடிவு எடுப்பதில் சில சிரமம் இருந்தது என கூறியிருந்தார்.
 
ஆனால், 400-க்கும் மேற்பட்டோர் தூக்குத் தணம்டனைக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அப்துல் கலாம் போல் போன்ற மிகச் சிலரே தூக்கு தண்டனைக்கு எதிராக சட்ட ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.