இறந்ததாக நினைத்தவர் எழுந்து ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (16:33 IST)
கர்நாடகா மாநிலத்தில் பிணமான கிடந்தவர் திடீரென எழுந்து பசிக்குது ஆப்பிள் ஜீஸ் இருந்தா கொடுங்கள் என கேட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
கார்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நிங்கப்பா(57) என்ற விவசாயி கடந்த 16ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிங்கப்பா உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் எனவும் கூறியுள்ளனர். 
 
இதனால் அவரது உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாக ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் கூறியுள்ளனர்.
 
இதையடுத்து வீட்டில் அவரது உடலிற்கு இறுதி சடங்கு செய்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் நிங்கப்பா திடீரென எழுந்து எனக்கு பசிக்குது ஆப்பிள் ஜூஸ் இருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார். 
இறந்துவிட்டதாக நினைத்தவர் எழுந்து ஆப்பிள் ஜூஸ் கேட்கிறார் என உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :