1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (07:45 IST)

மிக தீவிர புயலாக வலுவடைந்த 'பிபோர்ஜோய் புயல்.! எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு?

cyclone
அரபிக் கடலில் தோன்றிய 'பிபோர்ஜோய் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த 'பிபோர்ஜோய் என்ற புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த புயல் காரணமாக கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான மேற்கு மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் நகரும் என்றும் அதனால் அந்த மாநிலங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
 
அடுத்த 24 மணி நேரத்தில் 'பிபோர்ஜோய் புயல்  மிக தீவிர புயலாக வலுவடையும் என்றும் இதனால் வட மாநிலங்களுக்கு ஆபத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 'பிபோர்ஜோய் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva