1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (21:20 IST)

பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்: அரசின் அதிரடி உத்தரவு

Face Mask
பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என கேரளா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு எடுத்து வருகிறது. 
 
அந்த வகையில் கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
திரையரங்குகள் கடைகள் மால்கள் ஆகியவற்றில் கண்டிப்பாக சானிடைசர்கள் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்பது அடுத்த 30 நாட்களுக்கு இருக்கும் என்றும் அதன் பின் நிலைமையை பொறுத்து இந்த கட்டுப்பாடு நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran