திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 ஜூன் 2020 (09:54 IST)

இந்தியாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை எட்டியுள்ளது.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளத நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535லிருந்து 3,08,993ஆக உயர்வு; கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,47,195 லிருந்து 1,54,330ஆக உயர்வு; கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498லிருந்து 8,884ஆக உயர்வு.
 
அதாவது, இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,01,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 47,796 ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,717 ஆக உயர்வு.