வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (08:00 IST)

டெல்லியில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு:
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 6 மாதங்களுக்கு மேல் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் கடந்த செப்டம்பர் முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தை பொருத்தவரை தினமும் 7 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது சுமார் 2000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 
 
நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது/ டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தும் கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று மட்டும் 5 ஆயிரத்து 673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் டெல்லியில் நேற்று மட்டும் கொரோனாவால் 40 பேர் உயிரிழந்தனர் என்பதும் டெல்லியில் மொத்த பலி 6396 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது