1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (09:32 IST)

மீண்டும் 50 ஆயிரத்தை தாண்டும் தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,01,34,445 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,329 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,93,310 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,91,28,267 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 6,12,868 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 30,79,48,744 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.