1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (18:14 IST)

விவசாயிகள் பிரச்சனைக்காக தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சனைக்களுக்காக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
விவசாயிகளின் விளைப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துயது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விரேந்திர ஜாக்தாப் மற்றும் யாஷ்மோமாதி தாகூர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்வோம் என்று கூறியிருந்தனர்.
 
இந்நிலையில் அவர்கள் தங்கள் மீது மண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயற்சித்தனர். அதற்கு முன் காவல்துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தினர்.