வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2016 (18:08 IST)

புகைப்படத்தால் சர்ச்சைக்கு உள்ளான முன்னாள் பெண் அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி, விடுதி ஒன்றில் தனது வீட்டு வேலைக்கார பெண்ணை அருகில் நிற்க வைத்துவிட்டு உணவருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

 
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ரேணுகா சவுத்ரி விடுதி ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
 
இதில், சவுத்ரியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் உட்கார்ந்தபடு உணவருந்த, வேலைக்கார சிறுமி அருகில் நிற்க வைக்கப்பட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
அவற்றுள் சில:
 
Rishi Bagree: அன்பு ரேணுகா சவுத்ரி, உங்களால் இந்த சிறிய குழந்தையை, உங்களுடைய குழந்தையாக கருத முடியவில்லை என்றால், தயவுசெய்து அவர்களை இதுபோன்ற உணவகத்திற்கு அழைத்து வராதீர்கள்.
 
Nikhil: ரேணுகா சவுத்ரி மற்றும் இவர்களை போன்றவர்கள்தான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறார்கள். வெட்கம்...
 
Navneet Singh: ரேணுகா சவுத்ரி மனிதத்தன்மையை கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள்.