செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (19:05 IST)

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல்; படம்பிடித்த செயற்கைக்கோள்

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் உளவு கப்பல் நகர்வு குறித்த புகைப்படங்களை இஸ்ரோவின் செயற்கைக்கோள் படம் எடுத்து உள்ளது.


 

 
இந்தியா நாட்டின் பாதுக்காப்புக்காக ராணுவம் 13 செயற்கைக்கோள்களை பயன்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி புதிதாக கார்டோசாட் 2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்த செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்பில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 
 
இதன்மூலம் இந்திய ராணுவம் அண்டை நாடுகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா மோதல் ஏற்பட்டு வருகிறது. நீண்ட காலமாக இருக்கும் எல்லை பிரச்சனை அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பலின் நகர்வை ருக்மினி நாவால் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து உள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மலபார் கூட்டு கடற்படை பயிற்சி தொடங்க உள்ள நிலையில் அதனை கண்காணிக்கவே சீன உளவு கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.