1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 6 ஜூலை 2017 (14:44 IST)

இந்தியாவிற்கு இருபுறமும் கொடைச்சல் கொடுக்கும் சீனா, பாகிஸ்தான்!!

இந்தியாவிற்கும் சீனாவிற்கு எல்லயில் பிரச்சனை நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் தனது பங்கிற்கு ஏவுகணை சோதனை நடத்தி இந்தியாவிற்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.



 

 
இதனால் இந்தியாவின் இருபக்க எல்லையிலும் பதற்றம் கூடியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது சுமூகமான நிலை இல்லை. எல்லை தாண்டி தாக்குதல் நடைபெருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில், குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் 'நாஸ்ர்' என்ற ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஏவுகணைகள் குறிப்பாக இந்தியாவை குறிவைத்தே அங்கு தயாரிக்கப்படுகிறது. எனவே, சீனாவை அடுத்து பாகிஸ்தான் தனது பங்கிற்கு இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது.