செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (15:00 IST)

குழந்தையின் ’வாயில் கறுப்பு’ மச்சம் : பெற்றோர் அதிர்ச்சி

குழந்தை என்பது தெய்வத்துக்குச் சமம் என்று சொல்லுவார்கள்.அப்படிப்பட்ட குழந்தைகள் பிறந்தால் பெற்றோர்க்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும் அதுபோல்தான் தற்போது ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது.  ஆனால் அக்குழந்தைக்கு வாயில் மச்சம் போன்று கறுப்பாக ஒன்று இருந்ததால் அதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே இதைப் புகைப்படம் எடுத்து இப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இது வேகமாகப் பரவிவருகிறது.
ஆம்! ஒரு பெண்மணிக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை சிரிக்கும் போது அதன் வாயில் ஒரு கறுப்பு மச்சம் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறுவதற்காக அவர் தன் குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் , குழந்தை பிறந்தபோதிலிருந்து இது இருந்திருகலாம் என்று கூறியதைக் கேட்டு சாந்தம் அடைந்தார்.
 
ஆனாலும் அவருக்கு இதில் சந்தேகம் எழுந்ததை அடுத்து குழந்தையில்  வாயில் விரல் விட்டு அந்தக் கறுப்பை தொட அது காகிதம் போலிருந்துள்ளது. பின்னர் அதை அழுத்திதொட்டதும் அது கையில் வந்துவிட்டது. தாய் இல்லாத நேரத்தில் குழந்தை காகிதத்தை விழுங்கியுள்ளது. அது வாயில் ஓட்டியுள்ளதால்தான் அப்படி கறுப்பாகத்தெரிந்ததாக பின்னர் அவர் தெரிவித்துள்ளார்.