திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 மார்ச் 2018 (15:42 IST)

பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு சிறுவன் நன்றிக்கடிதம்!

தன் பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு விபு என்ற சிறுவன் நன்றிக்கடிதம் எழுதியுள்ளான்.


விபுவின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக 20-ஆண்டு காலமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு 7ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து. சிறுவனின் பெற்றோரை சேர்த்து வைத்தனர்.
 
இதற்கு நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்த சிறுவன் நன்றிக்கடிதம் எழுதினான், அதில்  அனைவருக்கும் கடவுள் ஏதோ ஒன்று வைத்துள்ளார், எல்லா பிரச்சனைக்களுக்கும் ஒரு வழி, எல்லா நிலழுக்கும் ஒரு வெளிச்சம், எல்லா கஷ்டங்களுக்கும் ஒரு உதவி, மற்றும் எல்லா நாளுக்கும் ஒரு திட்டம் என எழுதியுள்ளான்.