நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த தேர்வில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நீட் நுழைவு தேர்வில் நடைபெற்ற முறையீடுகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தேசிய தேர்வு முகமை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய தேசிய தேர்வு முகமை தலைவராக பிரதீப் சிங் என்பவர் பொறுப்பேற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இது குறித்து விசாரணை செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva