1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 31 ஜூலை 2017 (17:37 IST)

பான் எண் ரத்து செய்யப்படும்: மத்திய அரசு தரும் கடைசி வாய்ப்பு இதுதான்!!

ஆதார் எண்ணை பான் எண்ணை இணைப்பதற்கு கடசி வாய்ப்பளித்துள்ளது மத்திய அரசு. இவ்வாறு செய்யவிடில் பான் எண் ரத்து செய்யப்படும் என திட்டவட்டமாய் அறிவித்துள்ளது.


 
 
தனி நபர் வருமான வரி கணக்கு எண் என்று சொல்லப்படும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
 
ஒரு நபர் பல பான் கார்டுகளை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்து வரி ஏய்ப்பு செய்வதால் இந்த திருத்தம் கொண்டு   வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.