1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (19:13 IST)

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியாது: கர்நாடகா அறிவிப்பு.. என்ன செய்ய போகிறது தமிழக அரசு?

Cauvery
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறக்க முடியாது என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் கர்நாடகா திட்ட ஓட்டமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் மழை பொய்த்துள்ளதை அடுத்து அங்கு பெங்களூர் உள்பட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் திறக்கப்படாத நிலையில் இன்று டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடந்தது. 
 
இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் தமிழகம் சார்பில் காவிரியில் இருந்து திறக்க வேண்டிய நீரை திறந்து விட வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறக்க முடியாது என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 
 
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வறண்ட சூழ்நிலை காணப்படும் நிலையில் கர்நாடகா காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே தமிழக விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran