மத உணர்வுகளை காயப்படுத்துவதாக `போக்கிமான் கோ' விளையாட்டுக்கு எதிராக வழக்கு
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஸ்மாட் அலைபேசி விளையாட்டை உருவாக்கும் நிறுவனமான போக்கிமான் கோ, மத உணர்வுகளை காயப்படுத்துவதாக கூறப்பட்ட குற்றசாட்டிற்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில்களில் முட்டைகள் இருப்பது போல காட்டுவது இந்து மதம் மற்றும் ஜெயின மத கொள்கைகளை களங்கப்படுத்துவதாக உள்ளது என குஜராத்தில் ஒருவர் மனு அளித்திருந்தார்; அவரின் மனுவிற்கு நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
மனுதாரர், கோயில்களில் முட்டைகள் தடை செய்யப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார். இந்த `போக்கிமான் கோ' பல நாடுகளில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இரான் இதனை தடை செய்துள்ளது; கடந்த வாரம் ரஷியாவில் ஒருவர் தேவாலயத்தில் போக்கிமான் கோ விளையாட்டை விளையாடி மத உணர்வுகளை காயப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டார்.