வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (12:41 IST)

கனடா – இந்தியா விசா சேவை நிறுத்தம்! – இந்திய அரசு அதிரடி நடவடிக்கை!

Canada Visa
காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே உறவுநிலை விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவிலிருந்து வருவதற்கான விசாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு என்.ஐ.ஏ-வால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் அமைப்பான கேடிஎஃப் தலைவரான நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்திய தூதருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரை கனடாவை விட்டு வெளியேற்றியுள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து கனடாவின் தூதர் வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே அசௌகர்யமான சூழல் நிலவி வருவதால் கனடா – இந்தியா இடையேயான விசா சேவைகளை நிறுத்தி வைக்குமாறு விசா நிறுவனங்களுக்கு இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K