ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 2 மே 2017 (21:53 IST)

மோடிக்கு வளையல் வாங்கி கொடுப்பாரா பெண் அமைச்சர்? ஒரு செக் ஏற்படுத்திய பரபரப்பு

பாரத பிரதமர் நரேந்திரமோடி எப்போதும் டுவிட்டரில் பிசியாக இருப்பவர் என்பது தெரிந்ததே. உலகம் முழுவதிலும் இருந்து அவரது டுவிட்டர் கணக்கை மில்லியன் கணக்கானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். பிறந்த நாள், இரங்கல் செய்தி உள்பட அவ்வப்போது தனது அப்டேட்டை டுவிட்டரில் சரியாக செய்து அனைவரையும் அசத்துவதில் மோடி வல்லவர்.



 


இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய கொடுமையான தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 25 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் தமிழர்கள் மூவர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த விஷயத்தையும் உடனுக்குடன் அப்டேட் செய்யும் பிரதமர் மோடி இவ்வளவு பெரிய துயர சம்பவத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் எவ்வித கருத்தும், இரங்கல் செய்தியும் பதிவிடாமல் இருந்தார்

இதனால் அதிர்ச்சி அடைந்த முன்னாள் விளையாட்டு வீரர் அஜீத் வர்மா என்பவர், மத்திய பெண் அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ரூ.1000க்கு உரிய செக் ஒன்றை அனுப்பி, அதை வைத்து பிரதமர் மோடிக்கு வளையல் வாங்கிக் கொடுக்கும் படி ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார்.

மோடிக்கே நேரடியாக செக் அனுப்பாமல் ஸ்மிருதி இரானிக்கு அனுப்பியதிலும் ஒரு டுவிஸ்ட் உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது, அப்போதைய பிரமதர் மன்மோகன் சிங்கிற்கு வளையல் வாங்கி அனுப்ப விரும்புவதாக ஸ்மிருதி இராணி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் செய்த விமர்சனம் தற்போது அவருக்கே பரிதாபமாக திரும்பியுள்ளது.