1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 4 ஜூலை 2015 (01:40 IST)

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சிபிஐ புதிய உத்தரவு

பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் தயாநிதி மாறன் புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
 

 
பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் மத்திய அரசுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தது.
 
இந்த குற்றச்சாட்டு குறித்து, தயாநிதி மாறனிடம் ஜூலை 1 ஆம் தேதி, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவரிடம் 2 வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்றது. மேலும், ஒரு நாள் என மூன்று நாள் விசாரணை நடைபெற்றது. இந்த மூன்று நாள் விசாரணையில் பல கேள்விளுக்கு சிபிஐ அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பதில் அளித்தார்.
 
இந்நிலையில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் பயன்படுத்தியது ஒரே ஒரு தொலைபேசி இணைப்புதான், 300 இணைப்புகள் அல்ல. இதற்கான ஆதாரங்களை சிபிஐயிடம் நான் வழங்கியுள்ளேன் என்றார்.
 
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறனிடம் விசாரணை முடிந்த நிலையில், அவர் இந்த வழக்கு சம்பந்தமான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று சிபிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதனையடுத்தே, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.