திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (17:02 IST)

5பேரை கொன்ற சிறுத்தையை வேட்டையாட துப்பாக்கியுடன் காட்டுக்குள் புகுந்த மந்திரி

மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் 5 பேரை கொன்ற சிறுத்தையை வேட்டையாட துப்பாக்கியுடன் காட்டுக்குள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
மகாராஷ்டிரா மாநிலம் பாஜக அமைச்சர் கிரிஷ் மஹாஜன் சிறுத்தையை வேட்டையாட துப்பாக்கியுடன் காட்டுக்குள் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. ஜலகான் மாவட்டம், சலிஸ்கான் பகுதியில் சிறுத்தை புலியின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டைவிட்டு ஊருக்குள் புகுந்த ஒரு சிறுத்தை கடந்த ஒன்றரை மாதத்தில் 5 பேரை கொன்றுள்ளது.
 
இந்த சிறுத்தையை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாவட்டத்தின் வழியாக அமைச்சர் கிரிஷ் சென்றபோது சிறுத்தை நடமாட்டம் தெரிந்துள்ளது. சிறுத்தையை கண்ட அமைச்சர் உடனடியாக காரை விட்டு இறங்கி துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.
 
அமைச்சர் துப்பாக்கியுடன் சிறுத்தையை வேட்டையாட சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.