வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 3 ஜூன் 2017 (17:24 IST)

ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என போஸ்ட் செய்த 15 வயது சிறுவன் கைது

பீகார் மாநிலத்தில் ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற போஸ்ட் செய்த 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.


 


 
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஃப்சர் கான்(15) என்ற சிறுவன் தனது ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று போஸ்ட் செய்துள்ளான். இதற்காக காவல்துறையினர் இந்த கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:-
 
பீகார் பகுதி மக்கள் காவல்துறையினரை அணுகி இச்சிறுவன் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் இந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான், என்று தெரிவித்தனர்.
 
இதேபோன்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.