குத்துன்னா சும்மா இப்டிதான் குத்தனும்; அழகிகளுடன் ஆட்டம் போட்ட எம்.எல்.ஏ : வீடியோ
நடன அழகிகளுடன் ஒரு எம்.எல்.ஏ குத்தாட்டம் போட்ட பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முழுமையான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டது.
மேலும், மது அருந்துவோர் மற்றும் விற்பனை செய்வோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களே அதை மீறி வரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில்தான் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் வீட்டில் மது அருந்துவது போல் ஒரு வீடியோ வெளியானது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ ஷியாம் பாகதூர் சிங், மது அருந்திவிட்டு, பார் நடன மங்கையுடன் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. இது நிதிஷ்குமாருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.