வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (13:57 IST)

மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

virus
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட ஒரு சில மாநில முதல்வர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதன் பின் குணமாகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த 4 நாட்களாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு சோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து முதல்வர் நிதிஷ்குமார் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் 
 
இதனை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிதிஷ்குமார் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது