திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (18:57 IST)

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதால் ரூ.20 லட்சம் அபராதமா? - நடிகர் விளக்கம்

பிக்பாஸ் வீட்டிலிருந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வெளியேறியதால் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த தகவல் உண்மையில்லை என தெலுங்கு நடிகர் சம்பூர்னேஷ் பாபு கூறியுள்ளார்.


 

 
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் கலந்துக்கொண்ட சம்பூர்னேஷ் பாபு உடல்நலம் குறைவாக உள்ளதாகவும், பிக் பாஸ் வீடு வசதியாக இல்லை எனவும் கூறி கத்தியை எடுத்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டினார். இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார்.  
 
இதைத்தொடர்ந்து அவர் கத்தியை எடுத்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டியது வன்முறைக்கு விதிட்டதாக கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படதாகவும், அந்த அபராத தொகையை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பத்து நாட்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்ததாகவும் செய்திகள் வெளியானது.


 

 
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சம்பூர்னேஷ் “பிக்பாஸும்,  ஸ்டார் மா தொலைக்காட்சியும் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது. அதிலிருந்து வெளியேறியதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு அபராதம் விதித்ததாக எழுந்த தகவல் வெறும் வதந்தி மட்டுமே. அதில் உண்மையில்லை” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.