1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 16 ஜூலை 2017 (19:24 IST)

பீர் யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்

இந்தூரில் இன்று நடைப்பெற இருந்த பீர் யோகா நிகழ்ச்சி பல தரப்பினரின் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது.


 

 
பீர் யோகா என்பது பீர் குடித்து கொண்டே யோகா செய்யும் முறை. ஜெர்மனியில் முதல் முறையாக இந்த பீர் யோகா நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. பீர் யோகா உலக முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இதனால் இந்தியாவிலும் இந்த பீர் யோகா நிகழ்ச்சியை அறிமுகம் செய்ய மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பல தப்பினர் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காவல் நிலயத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் பீர் யோகா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.