1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 டிசம்பர் 2016 (10:23 IST)

மூன்று நாள் போராட்டம்: வங்கி ஊழியர்கள் சங்கம் அதிரடி முடிவு!!

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளினால் வங்கிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை வெளிபடுத்துவதற்காக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளது.


 
 
டிசம்பர் 28-ம் தேதி ஆர்பாட்டத்த தொடங்க போவதாகவும், டிசம்பர் 29ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதி மீண்டும் ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் போராட்டம் நடத்தப்படும் என்றுஅறிவித்துள்ளன.
 
மேலும் போராட்டத்தில், போதுமான பணத்தை வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுப்பப்படுவதோடு, ஏடிஎம் நடவடிக்கைகளும் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
 
இதை தவிர்த்து, வங்கிக் கிளைகள் பணமின்றி தவித்து வரும்போது சில தனியார்களிடம் புதிய நோட்டுகள் எப்படி புழங்குகிறது என்பதனை குறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளன. 
 
பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு, வங்கி ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம், கூடுதல் நேரம் பணியாற்றியதற்கு தகுந்த நிவாரணம்  போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு ஆர்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.