புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (18:52 IST)

சபரிமலை பக்தர்களுக்கு புல்லட் சவாரி – தெற்கு ரயில்வே அறிமுகம் !

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பம்பை வரை புல்லட்டில் செல்லும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.

கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து ஐய்யப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து ஐய்யப்பனை தரிசிக்க செல்ல ஆரம்பித்துள்ளனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் பொருட்டு புல்லட்டில் பம்பை வரை செல்லும் வாடகை புல்லட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

செங்கனூர் ரயில் திட்டத்தில் இருந்து பம்பை வரை செல்லும் 83 கிலோ மீட்டருக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு செங்கனூர் ரயில் நிலையத்தில் நவம்பர் 27 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.