1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 12 ஜூன் 2017 (19:09 IST)

பாஜக-வை கண்டு அசராத மேகாலயா; மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தீர்மானம்

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக மேகாலயா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 

 
மத்திய அரசு நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. இந்த தடைக்கு பல அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கேரளா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 
அதைத்தொடர்ந்து அண்மையில் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 2 பாஜக தலைவர்கள் கட்சியிலிருந்து விலகினர். இந்நிலையில் இன்று இன்று மேகாலயா சட்டப்பேரவையில் நடைப்பெற்ற சிறப்பு கூட்டத்தில் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.